Ticker

6/recent/ticker-posts

Ad Code

மகாராஷ்ட்ராவில் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு..! கடைகள், திரையரங்குகள், உணவகங்கள் 8 மணிக்கே மூட உத்தரவு

மகாராஷ்ட்ராவில் நேற்று நள்ளிரவு முதலே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரவு 8 மணிக்கே உணவகங்கள், திரையரங்குகள், மால்கள் , கடைகளை மூட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மும்பை தாதர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை 5 பேருக்கு மேல் கூடக்கூடாது, முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம், அனைத்து அரசியல் ,மதம், கலாச்சார நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்டங்களும் ரத்து உள்ளிட்ட கொரோனா கால ஊரடங்கின் வழிகாட்டல்களை நேற்று மகாராஷ்ட்ரா அரசு வெளியிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மகாராஷ்ட்ராவில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments