மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாமில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் முறையே 79.79 சதவீதமும் 72.14 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அஸ்ஸாமின் 47 தொகுதிகளுக்கும் மேற்குவங்கத்தின் 30 தொகுதிகளுக்கும் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் திரண்டு வாக்களித்தனர். அவர்களுக்கு முகக்கவசம், சானிட்டைசர், கையுறை போன்றவை வழங்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் நிறுத்தி வைக்கப்பட்டனர். கொரோனா காலத்திற்காக கூடுதலான ஒருமணி நேரம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments