போடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரச்சாரம் தேனி மாவட்டம் போடி தொகுதி அதிமுக வேட்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியும்- என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி யூனியன் உழவர்கரை சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவர முடியும் என்றார். அம்பை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடன கலைஞர்கள் வாக்கு சேகரிப்பு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவை ஆதரித்து நடன கலைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அம்பாசமுத்திரம் சாலையில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போல் வேடமணிந்த இரண்டு பேர் பாடல்களுக்கு நடனமாடியவாறு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர். வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை வாக்குச்சேகரிப்பு வந்தவாசி தி.மு.க. வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். வந்தவாசி பஜார் வீதியில் அவர் பிரச்சாரம் செய்த போது, பாமகவினர் சிலர் அவரது வாகனத்தை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் 3 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். புதுச்சேரியில் நீட் தேர்வு இருக்காது -திருச்சி சிவா பிரச்சாரம் புதுச்சேரியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பிரச்சாரம் மேற்கொண்டார். முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்தை ஆதரித்து பேசிய அவர், தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு புதுச்சேரியில் இருக்காது என்று கூறி வாக்குச்சேகரித்தார். ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு -திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி காலியாக உள்ள அனைத்து அரசுப் பணியிடங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையாவை ஆதரித்து புதியம்புத்தூரில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments