Ticker

6/recent/ticker-posts

Ad Code

மீன்பிடிப்படகில் போதைப் பொருள் கடத்தி வந்த இலங்கைப் படகு பறிமுதல் - 6 பேர் கைது

போதைப் பொருள் கடத்தி வந்த இலங்கையின் மீன்பிடிப் படகை கேரள மாநிலம் விழிஞ்சியம் அருகே சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்து மடக்கினர். அந்தப் படகில் இருந்த 300 கிலோ 323 கிராம் எடை கொண்ட ஹெராயின், 5 ஏகே.47 இயந்திரத் துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள், மற்றும் பல முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறையினர் போதைப் பொருள் கும்பலின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு தகவல் அளித்ததன் பேரில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments