Ticker

6/recent/ticker-posts

Ad Code

வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்கள்; வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டி சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சந்தோஷ் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்தோஷ் ஆட்டோ ஓட்டி சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பொரசப்பட்டு, பொருவளுர், மூங்கில்துறைப்பட்டு, சவுரியார்பாளையம், மைக்கேல்புரம், அருளம்பாடி, உலகம்பாடி, மணலூர், மேல்சிறுவள்ளுர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவர், கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார்.   விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் தீவிர தேர்தல் பிரச்சாரம் நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆதரவாளர்களுடன் திரண்டு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருமருகல், கொங்கராய நல்லூர், அம்பல், கயத்தார் உள்ளிட்ட இடங்களுக்கு திமுக மற்றும் விசிக ஆதரவாளர்களுடன் சென்ற அவர், பானை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மக்களிடையே கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: கனிமொழி சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வேலுவை ஆதரவாக அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி வாக்குசேகரித்தார். கபாலி தோட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.      

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments