திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வேலங்குடி சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், அந்த வழியாக வந்த நான்கு சக்கர வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமின்றி கத்தை கத்தையாக பணம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments