பெட்ரோல் டீசல் விலை நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பின் முதன்முறையாக கடந்த நான்கு நாட்களுக்கு முன் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து 92 ரூபாய் 58 காசுகளாக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து 85 ரூபாய் 88 காசுகளாக உள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments