மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவிலேயே பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்படுவர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 23 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 414 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மகாராஷ்டிர அரசு இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments