இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் 78 ரன்களும், தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் சாம் குரன் 95 ரன்களும், டேவிட் மாலன் 50 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தமிழக வீரர் நடராஜன் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றிக்கு வழிவகுத்தார். டெஸ்ட் மற்றும் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் 2- 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments