Ticker

6/recent/ticker-posts

Ad Code

மகாராஷ்ட்ராவில் புதிதாக 31,643 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

மகாராஷ்ட்ராவில் புதிதாக கொரோனா பாதிப்புடையவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 31 ஆயிரம் 643 ஆக இருந்தது கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் உயிரிழந்தனர். இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற வதந்திகளால் மக்கள் கவலையில் உள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நவாப் மாலிக், முழு ஊரடங்கு தவிர்க்கப்பட முடியும் என்றார். பொதுமக்கள் இடைவெளியை கடைபிடித்து, முக்கவசம் அணிந்து அவசியமானால் மட்டும் வீட்டை விட்டுவெளியே வர வேண்டும் என்றும் மகாராஷ்ட்ரா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments