மேற்கு வங்கத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் 248 கோடி ரூபாய் அளவுக்குப் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியைத் தக்க வைக்கத் திரிணாமூல் காங்கிரசும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையான போட்டியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் வாக்களிக்கப் பணம் கொடுப்பதைத் தடுக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றுவரை 37 கோடியே 72 லட்ச ரூபாய் பணம், ஒன்பதரைக் கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள், 114 கோடி ரூபாய் மதிப்பில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments