திருச்சியில் போலீஸ்காரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்ட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். திருச்சியில் போலீஸ்காரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்ட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் முதன்மைச் செயலாளருமான கே என் நேருதீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் பத்மநாதன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை காவல் நிலையம், உறையூர் காவல் நிலையம்,புத்தூர் காவல் நிலையங்களில் நேற்று ரூ.2000 அடங்கிய கவர்கள் போலீஸாருக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த மூன்று தினங்களாக திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு கவர் மூலம் பணம் பட்டுவாடா நடந்து வருவதாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தில்லைநகர், கண்டோன்மென்ட், உறையூர், எடமலைப்பட்டிபுதூர், பாலக்கரை கேகே நகர் , நீதிமன்ற காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உதவி ஆணையர்கள் 8 பேர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. உறையூர் காவல் நிலையத்தில் ஆய்வு நடத்திய உதவி கமிஷனர் வீரமணி தலைமையிலான குழுவிடம் ரூ. 1,60, 000 மதிப்புள்ள 2,000 ரூபாய் அடங்கிய கவர்கள் கைப்பற்றப்பட்டன. இந்த தகவல் கமிஷனர் லோகநாதனுக்கு தெரிவிக்கப்பட்டது. யார் மூலம் பணம் சென்றது ... பணம் கொடுத்தது யார் என்பது குறித் தகவல்வள் சேகரிக்கப்பட்டன. முதல் தகவலறிக்கை தேர்தல் பார்வையாளர் கிரிஷிடம் நேற்றிரவு ஆணையர் லோகநாதன் வழங்கினர். பண நடமாட்டத்தை தடுக்கும் போலீசாரே பணம் வாங்கிய விவகாரம் தேர்தல் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . குற்றச்சாட்டையடுத்து, தில்லைநகர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், நிலைய எழுத்தர் சுகந்தி உறையூர் காவல் நிலைய எஸ்.எ ஸ்.ஐ பாலாஜி உள்ளிட்ட சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தன் நற்பெயரை கெடுக்க இதுபோன்ற விஷமத்தனமாக செயல்களில் சிலர் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கே என் நேரு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments