கொரோனா 2-ஆவது அலை வேகமாக பரவி வருவதால் திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் 15 ஆயிரமாக குறைத்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயில், வைகுண்டம் காத்திருப்பு அறைகள், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்துமிடம் உள்ளிட்ட கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவறுத்தப்பட்டுள்ளது. மேலும் சானிடைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களையும் கொண்டு வர வேண்டும் என்றும், மத்திய- மாநில அரசுகளின் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments