Ticker

6/recent/ticker-posts

Ad Code

15 வருடங்கள் பழமையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

வரும் தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து  சென்னை உயர் நீதிமன்றத்தில்  திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சோதித்த பிறகே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்களை இணையம் மூலமாக தொடர்பு கொண்டு வாக்குப்பதிவில் திருத்தம்  செய்ய முடியாது என்றும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் மையங்களில் ஜாமர் பொருத்த அவசியமில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மேலும்பாதுகாப்பு காரணங்களுக்காக பதட்டமான வாக்குச்சாவடிகள் பட்டியல் வழங்க இயலாது உள்ளிட்ட விவரங்கள் பதில் மனுவில் உள்ளன. இதனை பரிசீலித்த நீதிபதிகள், திமுகவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு நாளில் கொரோனா பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டும் வழக்கை முடித்து வைத்தனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments