கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, பஞ்சாப் உள்ளிட்ட பாதிப்பு அதிகரித்துள்ள 12 மாநில அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் ஆலோசனை நடத்தினார். இம்மாநிலங்களின் கூடுதல் தலைமை செயலாளர்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர்கள், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 46 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பரிசோதனைகளை மிக அதிகளவில் நடத்துதல், பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் தனிமைப்படுத்தி அவர்களின் தொடர்புகளை கண்டறிதல், பொது மற்றும் தனியார் சுகாதார வளாகங்களை மீண்டும் தயார்நிலையில் வைத்தல், சரியான கோவிட் நடத்தை விதிமுறையை உறுதி செய்தல் போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments