ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஓட்டல் அறையில் வைக்கப்பட்டிருந்த 10 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நந்தியால் சோதனைச் சாவடி அருகே ஓட்டல் ஒன்றில் பத்து சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதன் காரணமாக அப்பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர். தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்த ஓட்டலில் இருந்த பலர் தீயில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments