மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தன் கார் பஞ்சர் ஆனதையடுத்து தானே ஸ்டெப்னியை கழட்டி மாட்டிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி. மக்கள் பணியில் நேர்மையாக செயல்படுபவர். அதிரடியாக நடவடிக்கை எடுப்பதில் வல்லவர் என்று பெயர் பெற்றவர். முக்கியமாக அரசியல்வாதிகள் யாரும் ரெக்கமெண்டேசன் என்று அவரிடத்தில் நெருங்கி விட முடியாது. அதே போல, அரசு வாகனத்தை தன் சொந்த தேவைக்கும் அவர் பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி விடுமுறையில் மால் ஒன்றுக்கு சுடிதார் அணிந்து சாதாரணமாக சென்றுள்ளார். பொதுவாக, விடுமுறையில் சென்றாலும் மாவட்ட ஆட்சியர்கள், அரசு கார், டிரைவர்களை பயன்படுத்துவார்கள். ஆனால், ரோகிணி தனக்கு சொந்தமான காரை தானே ஓட்டி சென்றுள்ளார். அரசு டிரைவரையும் கூட்டி செல்லவில்லை. இந்த நிலையில், கார் பஞ்சராகி விட, தன் காரில் இருந்த ஸ்டெப்னியை எடுத்து அவரே மாட்டிக் கொண்டிருந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் ஸ்டெப்னி மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்த ஒருவர் அவரை அடையாளம் கண்டு கொண்டார். 'மேடம் நீங்க ரோகிணி சிந்தூரிதானே... நீங்க ரோகிணி சிந்தூிரதானே ' எ்னறு ஆச்சரியத்துடன் அவரிடத்தில் கேள்வி கேட்கிறார். ஆனால், முதலில் அந்த நபரின் கேள்விக்கு ரோகிணி பதிலளிக்கவில்லை. பின்னர், முகத்தை திருப்பி அவரை பார்த்து ரோகிணி சிரித்த போது மைசூர் மாவட்ட ஆட்சியர்தான் தன் காருக்கு ஸ்டெப்னி மாட்டிக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியானது. பின்னர், அந்த நபரே மாவட்ட ஆட்சியர் காருக்கு ஸ்டெப்னியை மாட்டுவதை வீடியோவை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட அது வைரலாக பரவியது. மாவட்ட ஆட்சியர் நினைத்தால், தன் டிரைவரை வரவழைத்து வண்டிக்கு ஸ்டெப்னி மாட்ட கூறியிருக்கலாம். அவரும் வேறு காரில் சென்றிருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் தானே ஸ்டெப்னியை மாட்டியது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காருக்கு ஸ்டெப்னி மாட்டுவது சாதாரண விஷயமில்லை. ஜாக்கியை கொண்டு காரை உயர்த்தி பின்னர், கார் வீல் நட்டுகளை கழற்றி மாட்டுவது சவால் நிறைந்தது. ஆண்களுக்கே இது போன்ற காரியங்களை செய்யும் போது உதவி தேவைப்படும். ஆனால், தன் காருக்கு ஒற்றை ஆளாக ஸ்டெப்னி மாட்டிய ரோகிணி சிந்தூரியை கண்டு கார் மெக்கானிக்குகளே வியந்து போயிருக்கிறார்கள்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments