Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளுடன் சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்

சென்னை நந்தனம் ஒய்எம்.சிஏ.மைதானத்தில் 44 வது புத்தகக் காட்சியை  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைக்கிறார். மார்ச் 9 ம் தேதி வரை புத்தகக்காட்சி நடைபெறும் என்று புத்தக விற்பனையாளர்களின் சங்கமான பபாசி அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தகக்காட்சி பல வாரங்கள் தாமதமாகத் தொடங்குகிறது. வாசகர்களின் வருகையை எதிர்பார்த்து பல்வேறு பதிப்பகங்கள் ஏராளமான புதிய நூல்களைப் பதிப்பித்துள்ளன. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் காட்சி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அனைத்து புத்தகங்களுக்கும் பத்து சதவீதக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக சிறிய பதிப்பகங்கள், சிற்றிதழ்களுக்கான தனி அலமாரிகள் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments