தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் திரளான பாஜக தொண்டர்கள் அவரை வரவேற்றனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து அமித்ஷாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஏராளமான போலீசார் அவர் செல்லும் இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை புதுச்சேரி காரைக்கால் பகுதியில் நடைபெறும் பாஜகவின் மத்தியக் குழு கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.காரைக்காலில் பொதுக்கூட்டத்தில் பேசும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்த உள்ளார். மாலையில் விழுப்புரத்தில் நடைபெறும் விஜய் சங்கல்ப யாத்திரை மற்றும் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments