பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான ‘சர்வதேச எரிசக்தி மாநாடு' நாளை தொடங்கி வருகிற 5-ந் தேதி வரை காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் மோடி சிறப்புரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் எரிசக்தி தொழில் தலைவர்கள், வல்லுநர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments