Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாலகோட் தாக்குதல் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி விமானப்படை வீரர்கள் தாக்குதல் பயிற்சி

இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை குண்டுவீசித் தகர்த்த இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி நீண்ட தூர இலக்குகளை குறிவைத்துத் தாக்குதவதற்கான பயிற்சியில் ஈடுபட்டனர். பாலகோட்டில் தாக்குதல் நடத்திய அதே குழுவினர்தான் இந்தப் பயிற்சியிலும் பங்கேற்றனர். விமானப் படைத் தளபதி ஆர்.கே.எஸ். பகதூரியா மேம்படுத்தப்பட்ட மிராஜ் 2000 போர் விமானத்தில் பறந்தபடி பங்கேற்றார். 2019 பிப்ரவரி 26ம் தேதி அதிகாலையில் இந்திய விமானப்படையினர் பாலகோட்டில் தாக்குதல் தொடுத்தனர். விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் மிக் 21 பைசன் விமானத்தை ஓட்டி, பாகிஸ்தானின் ஜெட் விமானங்களை விரட்டிச் சென்றார். பாகிஸ்தான் எல்லையில் அவரது விமானம் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்தியாவின் நெருக்குதலால் அவரை பாகிஸ்தான் விடுவித்தது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments