Ticker

6/recent/ticker-posts

Ad Code

பெட்ரோல் பங்கில் பொங்கிய தம்பி பொசுக்குன்னு வாபஸ்..! இன்னும் பணம் கொடுக்கவில்லை

காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்கில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் போலீசில் தாம் அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார். பெட்ரோலுக்கு பணம் செலுத்தவில்லை என்று அவர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான சால்டின் சாமுவேல் தனது போர்டு ஐ கான் காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அங்குள்ள பங்க் ஒன்றிற்கு சென்றார். 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட தனது காரில் 47 புள்ளி 8 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பில் கொடுத்த நிலையில், பெட்ரோல் நிரப்புவதில் முறைகேடு நடப்பதாக சால்டின் சாமுவேல் பொங்கினார். காலை 11 மணிக்கு ஆரம்பித்த பிரச்சனை இரவு 8 மணி வரை நீடித்த நிலையில் இரு தரப்பிலும் சிவகாஞ்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பையும் அழைத்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அனைத்து வகையான கார்களிலும் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு என குறிப்பிடப்பட்ட அளவை விட 5 லிட்டர் முதல் 7 லிட்டர் வரை அதிகமாக கொள்ளளவு பிடிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் என்றும், பெட்ரோல் முழுமையாக நிரப்பும் போது அது நிரம்பி வெளியில் கொட்டாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரபல நிறுவனங்கள் அளித்த ஒப்புதல் கடிதங்களை போலீசில் ஒப்படைத்தனர். அந்த வகையில் தான் சாமுவேலின் காரில் உள்ள டேங்கில், ஏற்கனவே இருந்த பெட்ரோலுடன் சேர்ந்து 47.8 லிட்டர் பெட்ரோல் பிடித்துள்ளது என்று விளக்கம் அளித்ததோடு சில ஆண்டுகளுக்கு இதேபோல திருவனந்த புரத்தில் ஏற்பட பிரச்சனையை உதாரணமாக சுட்டிக்காட்டியதோடு, அவரது காரின் பெட்ரோல் டேங்கை கழற்றி பரிசோதித்தால் இந்த உண்மை தெரியவரும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த சால்டின் சாமுவேல், தான் சோதிக்க சொல்லும் போது பெட்ரோல் நிறுவனம் மறுத்ததாகவும், தற்போது அவர்கள் சொல்வதை தான் ஏற்கமுடியாது என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தை நுகர்வோர் நீதி மன்றத்தில் தான் பார்த்து கொள்வதாக கூறியதோடு, பெட்ரோல் நிரப்புவதில் முறைகேடு நடப்பதாக போலீசில் அளித்த புகாரையும் வாபஸ் பெற்றுக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சால்டின் சாமுவேல். இதையடுத்து பெட்ரோல் நிரப்பியதற்குரிய பணத்தை தரவில்லை என்றும் தங்கள் நிறுவன மாற்று திறனாளி ஊழியரைத் தாக்கியதாகவும், ஆதரவாளர்களை அழைத்து வந்த பெட்ரோல் பங்கில் வியாபாரத்தை கெடுத்ததோடு, அவதூறு பரப்பியதாகவும் சால்டின் சாமுவேல் மீது போலீசில் புதிய புகார் அளிக்கப்பட்டது. அளவுக்கதிகமாக பெட்ரோல் நிரப்பும் வசதி இருப்பதாக மோட்டார் வாகன கூட்டமைப்பு கடிதம் வழங்கி இருந்தாலும், சால்டின் சாமுவேல் பரிசோதனைக்கு காரை கொண்டுவந்தால் மட்டுமே பெட்ரோல் பங்கில் முறைகேடு நடந்ததா இல்லையா என்பதை சோதித்து அறிய இயலும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments