Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசிக்கு அவரச கால பயன்பாட்டிற்கு அமெரிக்கா ஒப்புதல்

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசிக்கு அவரச கால பயன்பாட்டிற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் வரும் வாரங்களில் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் கூறுகையில், தடுப்பூசியின் அங்கீகாரம் கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் எங்களுக்கு உதவும் என்றும், கொரோனா தடுப்பூசி சோதனையில் மிகக் குறைவான பக்க விளைவுகள் மட்டுமே இருந்தன என்றும் தெரிவித்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவிற்கு மார்ச் மாத இறுதிக்குள் 20 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments