முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா பாஜகவில் இணைந்தார். இந்திய அணிக்காகவும், மேற்குவங்க அணிக்காகவும் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா கடந்த 3-ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ(Babul Supriyo), மாநில பாஜ துணை தலைவர் அர்ஜுன் சிங் ( Arjun Singh ) முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். முன்னதாக, மேற்கு வங்கத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் மனோஜ் திவாரி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments