Ticker

6/recent/ticker-posts

Ad Code

இமாச்சலப் பிரதேச ஆளுநர் காரை நோக்கி செல்லும் போது எதிர்க்கட்சியினர் தாக்குதல்

இமாச்சலப் பிரதேச ஆளுநர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சியினர் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா மீது தாக்குதல் நடத்தினர். சட்டசபை உரைக்குப் பிறகு முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், சபாநாயகர் விபின் பரமர் ஆகியோருடன் ஆளுநர் தமது காருக்கு செல்வதைத் தடுத்த காங்கிரஸ் எம்.எல்,ஏக்கள் காகிதங்களைக் கிழித்து வீசினர். தள்ளுமுள்ளுக்கு இடையே ஆளுநர் காரை நோக்கிச் சென்றார். உறுப்பினர்கள் சிலர் காரின் பானெட் மீதும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் மார்ச் 20 வரை பேரவைக்கு வரத் தடைவிதித்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments