மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மும்பை ஓவல் மைதானம் இன்று முதல் மூடப்படுகிறது. இதுதொடர்பாக பிரிஹன்மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கிரிக்கெட் உள்பட எந்தவித நிகழ்வுகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை இந்த மைதானத்தில் அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments