திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடகடந்த 17ம் தேதி திமுகவில் விருப்ப மனுக்கள் தாக்கல் தொடங்கியது. திமுகவினர் திரளாக விருப்ப மனுக்களை செய்து வருகின்றனர்.எ.வ.வேலு, கவிஞர் சல்மா, ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் விருப்ப மனு அளித்துள்ளனர். வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்கு விருப்ப மனு பெறுவதற்கான அவகாசம் முடிவடைகிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று தமது விருப்ப மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments