Ticker

6/recent/ticker-posts

Ad Code

அரசுத்துறை தொடர்பான பரிவர்த்தனைகளை தனியார் வங்கிகளும் மேற்கொள்ளலாம்: மத்திய அரசு

வருவாய் கட்டண வசதிகள், ஓய்வூதியம், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்ற அரசு தொடர்பான வங்கி பரிவர்த்தனைகளை தனியார் வங்கிகள் கையாள்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையளர்களுக்கான வசதிகள் அதிகரித்து, போட்டித்தன்மை உருவாகி, வாடிக்கையாளர் சேவைகளின் தரம் மேம்படும் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை வங்கியியலில் புகுத்தி பின்பற்றுவதில், முன்னணியில் இருக்கும் தனியார் வங்கிகள், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும், அரசின் சமூகநலத் திட்டங்களை மேம்படுத்துவதிலும் இனி சமமான பங்குதாரர்களாக இருப்பார்கள். என்று ரிசர்வ் வங்கிக்கு அரசு தெரிவித்துள்ளது. நிர்மலா சீதாராமனின் அறிவிப்பைத் தொடர்ந்து தனியார் வங்கிகளின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments