சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகளை திரும்பப் பெற கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில் சபரிமலை போராட்டம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கேரளாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற மாநில அரசு முடிவு செய்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், தீவிர தன்மை இல்லாத வழக்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments