Ticker

6/recent/ticker-posts

Ad Code

சாதியம், ஊழல் என்ற சமூகத் தீமைகளில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் - துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு

நாட்டில் 98 சதவீத கிராம மக்களுக்கு கொரோனா தொற்று பரவவில்லை, ஏனெனில் அவர்கள் இயற்கையுடன் வாழ்கிறார்கள் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,இந்தியர்கள் மீது இயற்கை கருணை கொண்டுள்ளது என்றும், நாம் இயற்கையோடு இருக்க முயற்சிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார். நாம் உணவு பழக்கம் உட்பட பழக்கவழக்கங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறிய வெங்கையா நாயுடு, அனைவரும் பாரம்பரிய ஆரோக்கியமான உணவு பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். சாதியம், ஊழல் போன்ற சமூகத் தீமைகளில் இருந்து விடுபட்ட இந்தியாவை உருவாக்க இளைய தலைமுறை பாடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments