கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றுவதற்கான, வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான, நாட்டின் வளங்களை காப்பதற்கான தீர்வுகளை ஐஐடி கண்டுபிடிப்புகள் மூலம் மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ஐஐடி-யின் 66வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, தன்னலமற்றதன்மை ஆகிய 3 தாரக மந்திரங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். கொரோனாவுக்குப்பின் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு துறையில் இந்தியா உலகளவில் முக்கிய பங்காற்றும் நாடாக உருவெடுத்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments