தீவிரவாதம் மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 46வது மனித உரிமைக் கவுன்சில் உயர்மட்டக் கூட்டததில் உரை நிகழ்த்திய அவர் மனிதனின் அடிப்படை உரிமையான உயிர் வாழ்தலையே தீவிரவாதம் மறுப்பதாக கூறினார். தீவிரவாதத்தை ஒடுக்க மனித உரிமை அமைப்புகள் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கோரினார். இந்தியா ஜனநாயகமும் பன்முகத்தன்மையும் கொண்ட நாடு என்று சுட்டிக் காட்டிய ஜெய்சங்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments