Ticker

6/recent/ticker-posts

Ad Code

அண்டார்க்டிகாவில் லண்டன் நகரை விடப் பெரிய பனிப்பாறையில் வெடிப்பு

அண்டார்க்டிகாவில் இருந்த பிரம்மாண்ட பனிப்பாறை ஒன்று இரண்டாகப் பிளந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வே அமைப்பினர், தற்போது உடைந்துள்ள பனிப்பாறை சுமார் ஆயிரத்து 270 சதுர கிலோ மீட்டர் பரப்புக் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்தப் பாறையில் 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பாறை அளவில் லண்டனை விட பெரிதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பனிப்பாறையின் நகர்வை செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments