Ticker

6/recent/ticker-posts

Ad Code

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நள்ளரிவில் வெடிவிபத்து: ஒரே நாளில் இரண்டாவது முறையாக விபத்து

சிவகாசி அருகே பெத்துலுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு அறைகள் தரைமட்டமாயின. பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலை 70க்கும் மேற்பட்ட  அறைகளுடன் இயங்கி வருகிறது. பட்டாசு ஆலையில் உள்ள மணி மருந்து என்ற கலவை நீர்ந்து போனதால் வெடிவிபத்து நிகழ்ந்தாகக் கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் யாரும் இறக்கவோ, காயம் ஏற்படவோ இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த வெடி விபத்தால் 10க்கும் மேற்பட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட பலத்த சத்ததால்  மக்கள் பீதியடைந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments