பாஜக மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறை தாக்குதல் நடத்தி தேர்தலைக் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாகவும் சுதந்திரமான வாக்குப்பதிவுக்கான சூழலை அக்கட்சியினர் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் பாஜக பிரதிநிதிகள் புகார் அளித்தனர். மேற்குவங்கத்தில் எட்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு அம்மாநில முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜகவினர் வாகனங்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments