ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தீப்பிடித்த வீட்டுக்குள்ளிருந்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த கல்லூரி மாணவி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத 4 பேர் அந்தப் பெண் வாடகைக்குக் குடியிருந்த வீட்டை தீ வைத்துள்ளனர். அந்தப் பெண்ணையும் பலமாக தாக்கி, மயக்க மருந்து செலுத்தி பின்னர் மண் ணெண்ணெய் ஊற்றி வீட்டையும் கொளுத்தியதாக பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகத்தில் அப்பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சில மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments