சென்னை மெரினாவில், ஜெயலலிதா நினைவ வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதலமைச்சர், மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில், பீனிக்ஸ் பறவை வடிவில், அணையா விளக்குடன் அமைக்கப்பட்டுள்ள, ஜெயலலிதாவின் நினைவிடம், கடந்த ஜனவரி 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments