இத்தாலி நாட்டின் கமோக்லி நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில், கல்லறையின் ஒருபகுதி இடிந்து கடலில் விழுந்ததால், நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் தீயணைப்பு துறையினர்,கடலில் படகு மூலமாக சவப்பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட கல்லறை பகுதியில் இருந்து மேற்கொண்டு சவப்பெட்டிகள் கடலில் விழுந்துவிடாத படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments