Ticker

6/recent/ticker-posts

Ad Code

நீரவ் மோடியை அடைப்பதற்கு தயாராகி வருகிறது மும்பை சிறைச்சாலை

இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட உள்ள வைரவியாபாரி நீரவ் மோடிக்காக மும்பையில் உள்ள ஆர்தர் சிறைச்சாலை தயாராகி வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தப்பியோடிய நீரவ் மோடி இங்கிலாந்தில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ஆர்தர் சிறையில் நீரவ் மோடியை அடைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த ஏற்பாடுகள் குறித்து மகாராஷ்டிர அரசு, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீரவ் மோடிக்காக 300 சதுர அடி கொண்ட அறை தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments