Ticker

6/recent/ticker-posts

Ad Code

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத் தயாரிப்பு தடுப்பூசிக்கு அங்கீகாரம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்து நிறுவனம் தயாரிப்பான கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FDA அங்கீகாரம் அளித்துள்ளது. 44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்பு மருந்தை அவசர கால சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் சுமார் 2 கோடி டோஸ்கள் தயாரிக்கப்பட்டு உலகின் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் உடனடியாக 40 லட்சம் டோஸ்கள் ஏற்றுமதிக்கு தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments