சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பயணிகளை தனியார் பேருந்தில் செல்ல அரசுப் பேருந்து ஊழியர்கள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 3வது நாளாக நீடித்துவருவதால், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு பேருந்தில் ஏறி 3 மணி நேரம் ஆகியும் பேருந்தை இயக்காததால் பயணிகள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டுநரும், நடத்துநரும் கமிஷன் வாங்கிக்கொண்டு தனியார் பேருந்தில் செல்லச் சொல்வதாகவும், கணக்கு காட்டுவதற்காக ஒரு சில ஊழியர்கள் பணிக்கு வந்துள்ள போதும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தனியார் பேருந்து நடத்துனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments