காசோலை மோசடி வழக்கு விசாரணைகளை விரைவாக நடத்தி முடிக்க, கூடுதலாக தனி நீதிமன்றங்களை ஏன் அமைக்கக் கூடாது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி, எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதி நிர்வாகத்தை சிறப்பாக நடத்த, கூடுதல் நீதிமன்றங்களை அமைக்கும் உரிமையை, சட்டப்பிரிவு, 247 நாடாளுமன்றத்திற்கு அளிப்பதாக நீதிபதிகள்தெரிவித்தனர். இதனைப் பயன்படுத்தி, பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் காசோலை மோசடி வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க, கூடுதல் தனி நீதிமன்றங்களை மத்திய அரசு ஏன் உருவாக்க கூடாது என்றும் கேள்வி தொடுத்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments