மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தலைநகர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துவதற்காக பாஜக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். மத்திய அரசின் ஆலோசனைப்படி தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அவர் விமர்சித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments