ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக நாடு முழுவதும் இன்று 40 ஆயிரம் தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன. இதையடுத்து இன்று நாட்டின் பல்வேறு முக்கிய வர்த்தக மையங்கள், சந்தைகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 கோடி வர்த்தகர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர். ஜிஎஸ்டியின் கடும் வரிவிதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் நடத்தும் வணிகத்திற்கான ஒழுங்குமுறையை வகுக்கக் கோருதல் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்கம், சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் சங்கம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இன்று வேலைகளை புறக்கணித்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments