கடந்த 24 மணி நேரத்தில் 7 மாநிலங்களில் 89 சதவீத பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பதினாறாயிரத்து 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் எட்டாயிரத்து 807 பேருக்கும், கேராளாவில் நான்காயிரத்து 106 பேருக்கும் கொரோனா பரவியதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments