தமிழகத்தில் ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், மே 2ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அறிவிப்பைத் தொடர்ந்து நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. டெல்லியில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு மார்ச் 19ந் தேதி கடைசி நாளாகும். மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற மார்ச் 22 ஆம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் அதே நாளில் நடைபெறுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments