Ticker

6/recent/ticker-posts

Ad Code

சுயமரியாதை உறுதி செய்யப்படும்.! மத்திய தொகுப்பில், தமிழ்நாட்டிற்கு., 65% மின்சாரம்.!

கோவை மற்றும் புதுச்சேரியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, தனிநபரின் கண்ணியம், சுயமரியாதை உறுதி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய மின் திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65 சதவிகிதம் தமிழ்நாட்டிற்கே வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.  தனி விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வந்த பிரதமர், கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசின் திட்டங்களை தொடங்கி வைத்தார். மத்திய தொகுப்பில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65 சதவிகிதம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.  பின்னர், கொடீசியா வளாக மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் பரப்புரை மேற்கொண்டார். விழாமேடைக்கு காரில் வந்த பிரதமருக்கு, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், சாலையின் இருமருங்கிலும், திரளாக கூடி நின்று வரவேற்பு அளித்தனர். கொங்கு மண்டலத்திற்கு வந்து செல்வதில் பேருவுவகை கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர், ஜவுளித்துறைக்கும், கைத்தறித்துறைக்கும், விவசாயிகளுக்கும், மத்திய அரசு அமல்படுத்தும் திட்டங்களை பட்டியலிட்டார். பொறியியல், மருத்துவக் கல்வி ஆகியவற்றை அவரவர் தாய்மொழியில் பயில நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் மூலம் புதிய ஆட்சி மலர இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், திமுக, காங்கிரஸ் கூட்டணியை விமர்சனம் செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி கருணை மிகுந்த ஆட்சியாகும் என்ற பிரதமர், எதிர்க்கட்சிகள் அதற்கு நேர் எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவை அதிமுக தொண்டர்கள் அழைப்பதுபோல், அம்மா என்று குறிப்பிட்டு பிரதமர் உரையாற்றினார். இவ்வாறு புகழ்பெற்று விளங்கிய ஜெயலலிதாவிற்கு, தொல்லை கொடுத்தவர்கள் யார் என்பதை, தமிழ்நாட்டு பெண்கள் நன்கு அறிவார்கள் என்றார். முன்னதாக, காலையில் தனிவிமானம் மூலம், டெல்லியிலிருந்து சென்னை வந்த பிரதமர், அங்கிருந்து, புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். பின்னர், புதுச்சேரியில், சுமார் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டிய பிரதமர், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி லாஸ்பேட்டையில், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பரப்புரையை தொடங்கிய பிரதமர், அண்மையில் வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, மீனவர்கள் உட்பட அனைத்து வெகுஜனத்திற்கான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை என்றார்.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments