கொரோனா தடுப்பூசிக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தடுப்பூசி நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, இதற்காக ‘கோ-வின்’ இணையதளத்தில் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார். இதைப்போல அருகில் தடுப்பூசி போடும் இடங்களுக்கு நேரடியாக சென்றும் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் தங்கள் நோய் நிலவரம் குறித்த மருத்துவ சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments