அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த அவர், அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாகக் கூறினார். இந்த அறிவிப்பு தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments