அசாம் மாநிலம் கோக்ரஜாரின் மத்திய தொழில்நுட்பக் கழகத்தில் 5 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும் மாநிலத்தில் 27 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆர்.என்.பி சிவில் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஐந்து மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முழு வளாகமும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு மறுஅறிவிப்பு வரும் வரை சீல் வைக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments